பாலியல் தொல்லை : பேராசிரியர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க ABVP வலியுறுத்தல்

0 377
Stalin trichy visit

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்து வருகிறது.குறிப்பாக படிக்க கூடிய மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை போராசிரியர்.ஜெயக்குமார் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரியில் படிக்க கூடிய மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். கடந்த ஆண்டு முதல் போராசிரியர்.ஜெயக்குமார் அவர்கள் மீது பல புகார்கள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை ABVP வன்மையாக கண்டிக்கின்றது.அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்கல்வித்துறையிடம் ABVP தேசிய மாணவர் அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.கல்லூரியில் படிக்க கூடிய சக மாணவிகளிடம் தெளிவான விசாரணை வேண்டும் என ABVP கோரிக்கை வைக்கிறது.பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இருக்க கூடிய அனைத்து துறைகளிலும் இது குறித்த விசாரணை வேண்டும்.அக்கல்லூரியை உகந்த பாதுகாப்போடு அரசு நடத்த வேண்டுமென ABVP கேட்டுக் கொள்கிறது.இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறாமல் இருக்கவும் படிக்க கூடிய மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசும் தமிழக காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ABVP வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.போராசிரியர்.ஜெயக்குமார் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு : 8300312833

என்றும் கல்விப் பணியில்

ஹேம சூர்யா
மாநில இணை செயலாளர்
ABVP

Leave A Reply

Your email address will not be published.