திருச்சியில் போலீசார் அதிரடி கஞ்சா சோதனை
8 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழகத்தில் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே இரும்பு கரம் கொண்டு அதனை அடக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திருச்சி மாவட்டத்தில் போலீசார்
அதிரடி கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது
கோபால்,
கார்த்திக் மற்றும் முகமது அசாருதீன் ஆகிய மூவரும்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர்.
ஆயினும் இருவர் தப்பி ஓடி நிலையில் முகமது அசாருதீன் மட்டும் சிக்கிய நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருந்த 8 kg கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .
மேலும் தப்பிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.