திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தலைமையில் இன்று முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதில் கலந்து கொண்ட பணியாளர்கள் நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.
மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், திருஞானம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.