அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று (6.9.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம்,வையம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 182 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 9 இலட்சத்து 25 ஆயிரம். மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ,ஒன்றியக் குழுத் தலைவர் ந. குணசீலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்