ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு
ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக VSM மகால், காஜா நகர், ஒருங்கிணைக்கப்பட்ட ஆசிரியர் தின விழாவில் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி
சிறப்புரையாற்றினார்.
திருச்சி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக சேவா சங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000 நிதியும்,
காஜா மியான் மேல்நிலைப் பள்ளி சுகாதார வளாகம் கட்டுவதற்காக
ரூ.50000 நிதியும் அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் திரு.ஆர்.பிரபுகுமார், தலைவர் திரு.எஸ்.ஜாஹிர் உசேன் ஆகியோரும், தன்னார்வலர்களும் கலந்துகொண்டார்கள்.