யானை மறுவாழ்வு முகாமில் வனத்துறை அமைச்சர் ஆய்வு
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இன்று (10.9.22)திருச்சிராப்பள்ளி — சென்னை சாலையில் , எம் ..ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தினைப் பார்வையிட்டு, மரக்கன்றினை நட்டு வைத்து, அங்குள்ள யானைகளுக்கு உணவளித்து, யானைகள் பராமரிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்

. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமை வனப்பாதுகாவலர் .என்.சதீஸ், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரன், மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) தருண் குமார்,வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்மு. அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீகதிரவன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.