காவிரி பாலம் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்

0 368
Stalin trichy visit

திருச்சி, காவிரி பாலம் பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த 10 ஆம் தேதி மூடப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டும் காவிரி பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் காவிரி பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனயொட்டிகள் மிகுந்த சிரமத்துள்ளாகினர்.

பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திருச்சி காவேரி பாலத்தில் அலைமோதிய இருசக்கர வாகனங்கள் – ஒரே நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் பாலத்தை கடக்க முயன்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது – போக்குவரத்தை ஒழுங்குபடுத்த திணறிய போலீசார்.

திருச்சி காவிரி மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயங்கி வருகின்றன.

இருசக்கர வாகனங்களை மட்டும் பாலத்தில் செல்ல அனுமதி வழங்கிய நிலையில் இன்று காலை பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் வாகனங்கள் அதிக அளவு ஒரே நேரத்தில் வந்ததால் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக வாகன ஓட்டிகள் கடப்பதன்
காரணமாக பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த 5 மாதங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே போன்று தினமும் பி கவரில் போக்குவரத்து நெரிசல் இருந்தால் அதனை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழி பிதிங்கி நிற்கின்றனர் போக்குவரத்து காவலர்கள்.மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் இடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.