மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திருநங்கைகள் நடத்தும் இ சேவை மையம் திறப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ் நங்கை எனும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ- சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (13.9.22) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார்,
எம். பழனியாண்டி,, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், நபார்டு உதவி பொது மேலாளர் மோகன் கார்த்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை)மல்லிகா மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.