அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலி திருட்டு

0 333
Stalin trichy visit

திருவானைக்காவல் நெல்சன் ரோடு தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் இந்த மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் பின்புற பகுதியில் ஏரி குதித்து உள்ளே நுழைந்து கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தங்கத் தாலியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர் புதன்கிழமை காலை வழக்கம்போல் பூஜை செய்ய வந்த அர்ச்சகர் அம்மனின் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யம் காணாததைக் கண்டு திடுக்கிட்டார் இது குறித்து கோயிலின் முறைதாரர்களிடம் முறையிட்டார் மாரியம்மனின் திருமாங்கல்யம் திருடப்பட்டதை அறிந்தவுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோயிலின் முன்பு குவிந்தனர் இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து கோயிலின் சுற்றுப் பிரகாரங்களை ஆய்வு செய்தனர் பின்னர் கோயிலின் கருவறையில் உள்ள பீரோக்கள் திறக்க முடியாமல் போனதால் அங்கிருந்த விலைமதிப்பு மிக்க பொருட்கள் தப்பியது மாரியம்மனின் திருமாங்கல்யத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.