குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் திருச்சி விமான நிலையம் வந்தது
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடலானது இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
குவைத் நாட்டில் பணிபுரியும் இடத்தில் இறந்த திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சார்ந்த முத்துக்குமரனின் உடல் , தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு விமானத்தின் வாயிலாக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (16.9.22) கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடிக்கு சிறப்பு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்து அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.