வாத்தலை அருகே சாலை கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம்

0 321
Stalin trichy visit

திருச்சி முசிறி சாலையில் 14/09/22 அன்று வாத்தலை பேருந்து நிறுத்தம் வளைவு பகுதியில் அதி வேகத்தில் வந்து திரும்பிய கனரக வாகனம் ஆம்னி வேன் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்த நிலையில் இன்று அப் பகுதியில் சாலை பயனீட்டாளர் நல அமைப்பின் சார்பில் கள ஆய்வு செய்யபட்டது.

மேற்கண்ட இடத்தில் சாலை பாதுகாப்பு கட்டமைப்புகள் முறையாக அமைக்க படவில்லை
மற்றும் வளைவு பகுதியில் திரும்பும் அனைத்து வாகனங்களும் அதி வேகமாகவே வருகின்றன .மேலும் சாலையின் இரு புறமும் இடம் இருந்தும் பள்ளமாகவே காணபடுகிறது.வேகதடைக்கான அறிவிப்பு பலகை இருக்கு வேகதடையை காணவில்லை.வளைவு பகுதியில் பள்ளத்தில் அமைக்கபட்டுள்ள தடுப்புகள் உடைந்து கழன்று கிடக்கிறது.வளைவு பகுதியும் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரங்களில் நிறுத்த படும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேற்கண்ட குறைபாடுளை களைந்து சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுகிறோம் என்று சாலை பயனீட்டாளர் நல அமைப்பு  சார்பில் பெ.அய்யாரப்பன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.