வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை 2 நிமிடத்தில் இணைத்துவிடலாம்…
இதற்கு “Voter Help Line” என்ற மொபைல் ஆப் பயன்படுத்தலாம் . இதனை கூகுள் பிளே ஸ்டோரில், இந்த செயலியை முதலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதை ஓபன் செய்ததும் “வாக்காளர் பதிவு” என்றுள்ளதை அழுத்த வேண்டும். அப்படி செய்தால் ‘வாக்காளர் சேவைகள்’ என்ற பதிவு டிஎஸ்ப்ளேயில் தெரியும்.
முதல் பதிவு , எந்த மொழியில் தொடர வேண்டும் என்று கேட்கும். அதை கிளிக் செய்தால் 12 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ள விவரம் டிஎஸ்ப்ளேயில் தெரியும். அதில் நீங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்யலாம்.
பின்னர் அதே வாக்காளர் சேவை பட்டியலில் 5வதாக வேட்பாளர் ஆர்தண்டிகேஷன் படிவம் (படிவம் 6பி) இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்ததும் “மை நேம் ஈஸ் வோட்டர் மித்ரா” என்ற பதிவு திரையில் தெரியும். அதற்கு கீழே ‘ஸ்டார்ட்’ என்றுள்ள வார்த்தையை அழுத்தினால் , மொபைல் என்னை பதிவு செய்யச் சொல்லும். பதிவு செய்ததும் கீழே உள்ள ஓடிபி எண் அனுப்பும்படி உள்ள வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த நொடியே உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதிலே உள்ள 6 இலக்க ஓடிபி என்னை மட்டும் எடுத்து செல்போன் எண்ணுக்கு கீழே பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளதா என்று டிஎஸ்ப்ளேயில் கேட்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும் . இப்போது உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலம் எது என்பதை பதிவு செய்ய கேட்கும். அதை பதிவு செய்ததும் , நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும். இப்போது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள அணைத்து தகவலும் செல்போன் டிஎஸ்ப்ளேயில் தெரியும். மீண்டும் நெக்ஸ்ட் கொடுத்து அதிலே உங்கள் ஆதார் எண் , செல்போன் எண், இ மெயில் ஐடி, இடம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
இது எல்லாம் முடிந்ததும் வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்களது ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒரு மெசேஜ் வரும். அவ்வளவுதான் , படிவம் 6பி பயன்படுத்தி உங்கள் ஆதார் என்னை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திடும் பணி நிறைவு பெற்றது.