அம்பிகாபுரம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்மில் ஏ.சி.மிஷனை திருட முயன்றவர் கைது

0 260
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் ஏசி கம்ப்ரசர் இயந்திரத்தை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

டிப் டாப்பாக வந்து ஏடிஎம்மில் ஏசி கம்ப்ரஸர் இயந்திரத்தை பழுது நீக்குவதாக கூறி ஆட்டோவில் ஏசி இயந்திரத்தை ஏற்ற முயற்சித்த போது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து இளைஞர்களிடம் விசாரித்தனர் – இதில் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை பேசியதால் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அரியமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திருச்சி தாராநல்லூரை  சேர்ந்த வெங்கடேசன் என்பதும் இதற்கு முன்பு திருச்சி மாவட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம் ஏசி கம்ப்ரசர் இயந்திரத்தை திருடியது தெரிய வந்துள்ளது – இதை அடுத்து வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மற்ற நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.