திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 3 இலட்சம் : அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்
முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில் ரூ .3.00 இலட்சத்திற்கான வரைவோலையை அமைச்சர் கே.என், நேரு அவர்களிடம் மாநகராட்சி நகர பொறியாளர் திருமதி.எஸ்.அமுதவள்ளி வழங்கினார். அருகில் செயற்பொறியாளர்கள் திரு.பி..சிவபாதம் , திரு. ஜீ.குமரேசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் உள்ளனர்.