தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனைவி மறைவு : பேராசிரியர் காதர்மொகிதீன் இரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்:அருமை சகோதரர் திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராஜா அவர்களின் அன்புத் துணைவியார் பரமேஸ்வரி அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். புதுடெல்லியில் தங்களின் இல்லத்தில் அருமை சகோதரி அவர்களின் உபசரிப்பில் உண்டது எல்லாம் நினைவிற்கு வந்து பெரும் சோகத்தைத் தந்தது. துணைவியை இழந்துள்ள தங்களுக்கு தாங்கும் சக்தியை இறையருள் வழங்கப் பிரார்த்திக்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி பெற இறையருளை வேண்டுகிறேன் இவ்வாறு பேராசிரியர் கே எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.