திருச்சி அருகே கருத்து வேறுபாட்டால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

0 411
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (39) டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.இவரது மனைவி பரமேஸ்வரி(35)தம்பதிகளுக்கு 8 வயதில் மணிகண்டன் என்ற பெயரில் மகன் ஒருவர் உள்ளார்.குமாரசாமியின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமாரசாமியின் தந்தை ஜெகதீசன் மகன் மற்றும் மருமகள், பேரனை தொட்டியம் அருகே தான் வசிக்கும் அலகரை கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து சமரசம் செய்து தங்க வைத்து இருந்தார்.இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள புளியமரத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொட்டியம்போலீசார் குமாரசாமி, பரமேஸ்வரி ஆகியவரின் சடலங்களை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்தை முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமாரசாமி தான் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை, குறித்தும் தனக்கு பிறரிடம் இருந்து வரவேண்டிய கடன் தொகை குறித்தும் ஒரு துண்டு சீட்டில் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்துள்ளார்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்கொலையில் முடிந்த நிலையில் எட்டு வயது குழந்தை பெற்றோரை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.