அண்ணா ஸ்டேடியம் பகுதியில் நடைபயிற்சி பாதையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் நடை பாதையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடை பயிற்சி செய்யும் பாதையில் கடந்த சில நாட்களாக மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடக்கிறது. அதை அகற்றாததால் நடை பயிற்சியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.