அரசு மருத்துவமனை குறைகளை தீர்க்கக்கோரி சி.பி.ஐ.கட்சி போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

0 258
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் மருத்துவர் செவிலியர் பணியாளர் பற்றாக்குறை மருத்துவ வசதி குறைபாடுகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்டோபர் 7ம் தேதி அன்று மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்தனர்

இதனை அறிந்த அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை டீன் நேரு அவர்கள் அக்டோபர் 6 காலை 10.30 மணியளவில் உடனடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து அவரது அறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் அவர்களின் முன்னிலையில் மேற்கு பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துச்சாமி மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா பகுதி துணைச் செயலாளர் இப்ராஹிம் பொருளாளர் ரவீந்திரன் ,மாவட்ட குழு உறுப்பினர் சூர்யா , முருகன் , ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் நடராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர், பேச்சுவார்த்தையில் மருத்துவ முதன்மை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் தலைமை செவிலியர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர், மருத்துவமனையில் நிலவும் மருத்துவர், செவிலியர் , பணியாளர் பற்றாக்குறை உள்ளது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் மருத்துவமனை வசதி குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்திடவும் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.