மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம்
மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துதல்.
அரசாணை என்.98, பள்ளிக் கல்வித் துறை, நாள். 01.06.2022- ன்படி தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான () மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக மாண்புமிகு நீதியரசர் திரு.த.முருகேசன் (புதுதில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதியரசர்) அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
படையில், வருகின்ற 11.10.2022 அன்று அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி சார்ந்து மாநிலக் கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்துக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கல்வியாளர்கள்/தன்னார்வலர்கள்/ தொண்டு நிறுவனங்கள்/ பேரசிரியர்கள்/ ஓய்வு பெற்ற பேரசிரியர்கள்/ ஆசிரியர்கள் / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / மாணவர்கள் / பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கருத்துக்களை 4 தாளில் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.
கருத்து கேட்புக் கூட்டத்தில் விவாதிக்க பட வேண்டிய முக்கிய காரணிகள்
1. முன் குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கான ஆசிரியர் பயிற்சிக்கல்வி, வளரிளம் பருவத்திற்கான மாறிவரும் உலகலாவிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு நவீன புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கி மறுசீரமைப்பதற்கான கருத்துக்களை தெரிவித்தல்.
2. கற்றல் விளைவுகள், வேலை வாய்ப்பிற்கான திறன்கள் ஆகியவை உள்ளடங்கிய கல்வியினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அனைவருக்கும் சமமான தரமான கல்வியை மேம்படுத்தி வழங்குதல் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல்.
3. தேர்வு முறைகளில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புகள் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல்.
4. ஆசிரியர் நியமனங்கள், பயிற்சி மற்றும் அவர்களுக்கான பொறுப்புகளை உறுதி செய்வதன் மூலமாக முன்மொழியைப்பட்ட இலக்குகளை அடைதல் குறித்த மறுசீரமைப்புகள் தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல்.
5. வாழ்வியல் திறன்கள், படைப்பாற்றல், மென்திறன்கள், மொழியாற்றல், சமூகநீதி மதிப்புகளை கல்வியின் அங்கமாக்குவதற்கான ஆலோசனைகளை தெரிவித்தல்.
6. பள்ளிக் கல்வியினை முடித்த அனைவரும் கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், தொழிற்கல்வி போன்ற ஏதேனும் ஒரு உயர்கல்வியினைத் தொடருவதனை உறுதி செய்தல் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல்.
7. உயர்க்கல்வியில் ஆராய்ச்சி போக்குகளின் தரத்தினை உறுதி செய்தல் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல்.
8. இந்திய மற்றும் அயலக நிதி சார் அமைப்புகளிடமிருந்து நிதியினை பெறுவது தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல்.