குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொடங்கப்பட்ட நூலகம்
திருச்சி மாநகரம், ஏர்போர்ட் அன்னை ஆசிரமம் குழந்தைகள் இல்லத்தில் புத்தக வாசிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 08.10.2022 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் முனைவர் பிரபு, சியாமளா, நேத்தலிக், பவுலின் ஆகியோர் அன்னை ஆசிரமம் குழந்தைகள் இல்லத்தில் நூலகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து புத்தகம் வாசிப்பு அவசியம், புத்தகம் வாசிப்பு பழக்கத்தை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்துதல், புத்தகம் வாசிப்பு என்பது உரையாடல் வழியாகவும், கலந்துரையாடல் வழியாகவும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும் சிறப்புரையாற்றினார்கள். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வாசிப்ப இயக்கம் தொடங்கப்பட்டது. குழந்தைகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.