மல்பெரி பயிரிடப்பட்டுள்ள வயல்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகுடி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரி வயல்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மல்பெரி பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் சாகுபடி முறைகள மற்றும் நிகர இலாபம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது உதவி இயக்குநர் பட்டுவளர்ச்சித்துறை ரெங்கப்பாப்பா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.