அடையாளம் தெரியாத வாகனம் மோதி் வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சமயபுரம் அருகே வி துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் 34 வயதான புருஷோத்தமன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூத்தர் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குளானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி்வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்