பூட்டிய வீட்டில் 10 சவரன் நகை- பணம் கொள்ளை
திருச்சியில் பட்டபகலில் பூட்டி இருந்த வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் 18500 ரொக்கம் திருட்டு – போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி புது தெரு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் இவர் திருச்சி துறையூர் சாலையில் மிக்சி சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிருந்தா இவர் துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரம் காந்தி மான்ய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை தனது மனைவியை பள்ளிக்கு அனுப்பி விட்டு தியாகராஜன் கடைக்கு சென்று உள்ளார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட தியாகராஜன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் 18500 ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.
தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் இந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் பூட்டி இருந்த வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.