பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு
இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது

ரோட்டரி ஜம்புகேஸ்வரம் ஏற்பாட்டின்படி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 443 குழந்தைகள் பரிசோதனை செய்யப் பட்டு 37 மாணவர்களுக்கு கண்ணாடி அணிய அல்லது மேலும் மருத்துவ பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டது – இன்று வரை தன் குறைபாடு கண்டறியப்படாமல் வகுப்பறையில் சிரமப்பட்ட செல்வங்கள் இனிகல்வியை தொடர்வார்கள்.
முகாமினை ஏற்பாடு செய்த ஜோசப் கண் மருத்துவமனை, ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கத்திற்கு பள்ளி குழந்தைகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது