ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை முடிந்த பின் விவரங்கள் தெரிவிக்கப்படும் டி.ஜி.பி.ஷகில் பேட்டி
திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு :சந்தேகத்திற்கு இடமான வட்டத்தில் உள்ள 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த டிஜிபி ஷகில் அக்தர் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை :
ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகீல் அக்தர் முன்பு இன்று ஆஜராக உள்ளனர்.அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை திருச்சி திருவரம்பூர் அருகே நடைபெற உள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன்,நந்தகுமார் ஆகியோருக்கு சிபிஐ உதவியுடன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகே இந்த வழக்கில் வேறு எந்த திருப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தெரிய வரும்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி ஷகில் அக்தர் :வழக்கின் விசாரணை சென்று கொண்டுள்ளது.விசாரணை முடிந்த பின்னர் கண்டிப்பாக நான் முழு விபரங்களை கூறுகிறேன் – அதற்கு முன்பாக நான் எதையும் கூற முடியாது.இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை நான் கூற முடியாது – ஆனால் நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம்.சிறப்பு புலனாய்வு குழுEnquiry செய்ய எல்லா ஏற்பாடுகளும் எங்களுக்கு நல்ல முறையில் செய்து தந்துள்ளனர் – எதை ஊடகங்களுக்கு முன்னால் சொல்ல முடியுமோ அதை மட்டுமே நான் சொல்ல முடியும் – எல்லாவற்றையும் தெரிவிக்க முடியாது