பொது கழிவறையில் தவறி விழுந்த முதியவர் பலி

0 245
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் பொதுக் கழிவறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.

லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் 62 வயதான மணி.இவர் லால்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக மும்முடிசோழமங்கலத்தில் உள்ள பொதுக் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் எதிர்பாராதமாக தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.பின்னர்வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.