புளிய மரத்தில் பைக் மோதி விபத்து – ஒருவர் பலி
கொனலையில்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொனலை திருச்சி தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பிரிவு சாலையில் உள்ள தச்சகுறிச்சி சிறுகனூர் செல்லும் சாலையில் மோட்டார் பைக்கில் வந்தவர் புளிய மரத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான அன்பழகன். இவர் தனது மோட்டார் பைக்கில் சிறுகனூர் தச்சங்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள திருச்சி தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பிரிவு சாலையில் உள்ள மண் பாதையில் தனது மோட்டார் பைக்கில் நேற்றிரவு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் எதிர்பாராத விதமாக புளிய மரத்தில் மோதியுள்ளார் .இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவில் விபத்து நடந்ததால் யாரும் கவனிக்காமல் சென்றுள்ளனர். காலையில் அவ்வழியே சென்றவர்கள் பார்த்தபோது சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிருந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.