மூதாட்டியை ஏமாற்றி 12 1/2 பவுன் நகை கொள்ளை

0 214
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரில் 80 வயது மூதாட்டியை ஏமாற்றி 12 1/2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரைச் சேர்ந்தவர் 80 வயதான தெரஸ் ராஜாமணி்.இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவருடைய கணவர் அருள்சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்நிலையில் தெரஸ் ராஜாமணி திருச்சியில் உள்ள அருங்கொடை இல்லம் ஆலயத்திற்கு சென்று விட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது தாளக்குடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாதா இரண்டு மர்ம நபர்கள் ஆமின் வேனில் வந்து உங்கள் மகன் பேரன் விபத்தில் காயமடைந்து விட்டதாக கூறி அவரை ஆம்னி வேனில் ஏற்றி சென்றனர்.
வழியில் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயின் ஐந்தரை பவுன் வளையல் ஒன்றரைப் பவுன் மோதிரம் உள்ளிட்ட பன்னிரெண்டரை சவரன் தங்க நகைகளை அவரிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் இது குறித்து தெரஸ் ராஜாமணி கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.