ஊட்டத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

0 242
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.

ஊட்டத்தூரில் பெயர் விலாசம் தெரியாத 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் அவ்வழியே சென்றுள்ளார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் நெஞ்சு வலிக்குது என தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். பின்னர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இவருடைய பெயர் விலாசம் எதுவும் தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஊட்டத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இங்கு வந்தார் எங்கு சென்றார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.