திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் தலைமை நீரேற்று நிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
திருச்சி பஞ்சக்கரையில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம் பழுதடைந்துள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை நேற்று சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மாதவன், நிருவாகப் பொறியாளர் பன்னீர்செல்வம், துவாக்குடி நகர்மன்ற தலைவர் காயம்பு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.