பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து : 3 பேர் கைது

0 366
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டியில் வெடி வெடித்து பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து. 3 பேர் கைது.

அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் 35 வயதான செந்தில்குமார். இவருடைய அண்ணன் 40 வயதான பாலசுப்பிரமணி. இவர்களுடைய உறவினர் பெண் தனது மகளுடன் மோட்டார் பைக்கில் சென்று செந்தில்குமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அழகிய மணவாளம் செங்குலிப்பட்டியைச் சேர்ந்த 22 வயதான கார்த்திக், அழகியமணவாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தீன் என்கின்ற முகமது ஜலாலுதீன், 21 வயதான லோகேஷ் மற்றும் 17 வயது சிறுவன் சாலையில் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். மோட்டார் பைக்கில் சென்றவர்கள் மீது வெடி வெடித்த தீப்பொறி அவர்கள் மீது பட்டதாகவும் அவர்களை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது அண்ணன் செந்தில்குமார் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இது குறித்து இளைஞர்களிடம் கேட்டு அப்போது சமாதானம் அடைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் அவர்களது வீட்டுக்கு சென்ற இளைஞர்கள் கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர். இதில் அண்ணன் தம்பி இருவரும் படுகாயம் அடைந்து மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புகாரின் பேரில் கார்த்திக் முகமது ஜலாலுதீன் லோகேஷ் மற்றும் 17வது சிறுவன் ஆகிய நான்கு பேரும் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் கார்த்திக் லோகேஷ் முகமது ஜலாலுதீன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.