குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பிகே அகரத்தில் குடும்பப் பிரச்சனையால் மன உளைச்சல் அடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .
பி கே அகரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 67 வயதான வடிவேல். கூலித் தொழிலாளி இவரது மனைவி 60 வயதான செல்லம்மாள். இவர்களுக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக சென்றுவிட்டனர். கணவன் மனைவி மட்டும் வாழ்ந்து வந்த நிலையில் வறுமையும் வாட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த முதியவர் கடந்த 24ஆம் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுகனூர் போலீசார் உடற்கூறி ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் பின்னர் வழக்கு பதிவு செய்த சிறுகனூர் விசாரணை செய்து வருகின்றனர்.