சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
லால்குடி அருகே மேலவாளாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் 46 வயதான கருப்பையா. இவர் நேற்று திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மோட்டார் பைக் அவர் மீது மோதி விட்டு தப்பி சென்றது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட நபரை அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.