டாஸ்மார்க் கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி .இவரது மகன் 43 வயதான சேவியர் ராஜ் .இவர் லால்குடியில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29ஆம் தேதி வேலைக்குச் சென்ற தனது மோட்டார் பைக்கை அரசு மதுபான கடை முன்பு நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றார். பின்னர் இரவு 11:30 மணிக்கு பணியை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் யாரோ மோட்டார் பைக் திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.