துபாயில் கலக்கும் தமிழ்நாடு மாணவர்கள் : வீடியோ வெளியீடு
துபாயில் கலக்கும் தமிழக மாணவர்கள் இந்த கல்வி சுற்றுலா தங்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளதாக வீடியோ வெளியீடு
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 68 மாணவர்கள் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வி சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்று அரசு அபுதாபி அரச குடும்பத்தினரின் அரண்மனையையும் ஐக்கிய அரபு அமீரகம் வளர்ச்சி அடைந்த வரலாற்றை விவரித்த மின்னொளி விளக்க படத்தையும் கண்டு களித்தனர்.
மேலும் அந்நாட்டின் புகழ் பெற்ற Louvre அருங்காட்சியகத்தையும், அரசு குடும்பத்தினரின் அரண்மனைகளையும் பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.
இந்த கல்விச் சுற்றுலா தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதோடு எண்ணற்ற அனுபவங்களை கொடுத்துள்ளதாக சுற்றுலா சென்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.