திருப்பஞ்சலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் வட்டாரம், திருப்பஞ்சலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தை உரிமை,பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தியகராஜன் தலைமையில் 14.11.22 நடைபெற்றது.தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு குழந்தைகள்
என்போர் (0 முதல் 18 வயது வரை) தாயின் கருவறை முதல் பதினெட்டு வயது பூர்த்தியாகும்வரை உள்ளவர்கள்,அவர்களுக்கான உரிமைகள் நான்கு வகையாகும் வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பிற்கான உரிமையாகும் என்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தை திருமணம், பாலியல் வன்முறை (போக்சோ),குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கினார்.
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ்,

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ஜான்பால் அசோக் ஆகியோர் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், கல்வியின் அவசியம், இலவச தொலைபேசி எண் 1098, போதைப்பொருளினால் ஏற்படும் பிரச்சனைகள், இணையவழி குற்றங்கள் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எழுதுகோல் பொருள் வழங்கப்பட்டு, குழந்தை நலன் சார்ந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.