நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை-மாவட்ட ஆட்சியர்
நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.
திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இருசக்கர வாகனம் மட்டும் செல்ல இது நாள் வரை அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
பாலத்தின் தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் elestrometric bearings பொறுத்தும் புனரமைப்பு பணியானது நாளை முதல் தொடங்கி நடைபெற உள்ள காரணத்தினால் இன்று நள்ளிரவு முதல் இருசக்கர வாகனங்களும் காவேரி பாலத்தில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.