கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…
உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு .
உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் நீரில் மிதந்து வருவதாக கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய கொள்ளிடம் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.