முசிறி காவல் கோட்டத்தில் டிஎஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்…

0 355
Stalin trichy visit

முசிறி காவல் கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் டிஎஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி காவல் கோட்டத்தில் முசிறி காவல் நிலையத்தை சேர்ந்த வடிவேல், ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த வளர்மதி, மற்றும் காமராஜ், டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் சரஸ்வதி, நெடுஞ்சாலை போக்குவரத்தில் பணிபுரியும் அங்கமுத்து மற்றும் துறையூர் காவல் நிலையத்தை சேர்ந்த முத்துச்செல்வன், ஆகியோர் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்கள் மரியாதை நிமித்தமாக முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யாஸ்மினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் இவர்களுக்கு காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள், உள்ளிட்ட பலர் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.