கிணற்றில் விழுந்த தேங்காயை எடுக்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி பலி…

0 306
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முக்கண்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற அழகு (வயது 44). விவசாயியான இவர் இன்று மாலை தனது தோப்பிற்கு தேங்காய் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது சில தேங்காய்கள் அருகே உள்ள ஒரு கிணற்றில் விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் 25 ஆழத்திற்கு தண்ணீர் நிறைந்திருந்த நிலையில் கிணற்றில் இறங்கிய அழகு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதற்கிடையே தோட்டத்திற்கு சென்ற அழகு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அவரை தேடிச்சென்றபோது கிணற்றின் அருகே அவரது உடைகள் இருப்பதைப் பார்த்து கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகமடைந்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அழகுவின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துவரங்குறிச்சி போலீசார் அழகுவின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.