அரசியலமைப்பு தினத்தையொட்டி மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி (இன்று) இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில் இன்று(26.11.2022) இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி மேயர் அவர்கள் வாசிக்க மாநகராட்சி உதவி ஆணையர்கள்சி. பிரபாகரன், ஆர். ரமேஷ் குமார் ,எஸ். மீனாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் அரசியலமைப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.