வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் வார்டு உறுப்பினரின் வீட்டிற்க்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு.தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தாளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மகன் இளையராஜா. இவர் தாளக்குடி ஊராட்சியில் வாடு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. பின்னர் வீட்டில் இருந்த குழாய்க்குள் பாம்பு ஒளிந்து கொண்டது. பாம்பை கண்டதும் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்பவ்இடத்திற்க்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் குழாயில் மறைந்திருந்த நல்ல பாம்பை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டனர். பின்னர் பாம்பை அங்குள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.