ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது

0 489
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெற்ற தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.லால்குடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் தினமும் இரவில் கஞ்சா மற்றும் மது போதையில் வீட்டுக்கு வருவதாக வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பத்தன்று இரவு அவரும் அவரது மனைவி மற்றும் குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குழந்தை திடீரென அழுததால் அவரது மனைவி சென்று பார்த்து போது கணவர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருந்ததை அறிந்து அதிர்சியடைந்தார். இதனைடுத்து குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் மகளிர் காவல்துறையினர் தாய் தந்தையிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.