பள்ளி கழிவறை அருகே இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவால் பரபரப்பு
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் பள்ளி கழிவறை அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் இறந்த நிலையில் ரத்தத்துடன் ஆண் குழந்தை கிடந்துள்ளது. இது பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் பற்றி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதனுக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.