தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்-முன்னாள் எம்.பி. ப.குமார் அழைப்பு…

0 256
Stalin trichy visit

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக  திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு பாதுகாப்பின்மை, ஆன்லைன் ரம்மி தடையின்மை, போதைபொருள் சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டிவதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும்  தி.மு.க. அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், 13.12.2022 அன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும், 14.12.2022 அன்று அனைத்து ஒன்றியங்களிலும், 16.12.2022 அன்று பேரூராட்சிகளிலும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட, ஒன்றிய, வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.