அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

0 272
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கரட்டாம்பட்டி சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.சிறுகாம்பூர் அருகே ராமகிரிபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் 33 வயதான சந்திரசேகர் இவர் இன்று காலை தனது மோட்டார் பைக்கில் சொந்த வேலையாக தனது மனைவியின் தங்கை செல்வி அழைத்துக்கொண்டு ராமகிரிபட்டியலிலிருந்து சோழங்கநல்லூருக்கு சிறுகாம்பூர் கராட்டாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் முசிறி தாலுக்கா ராசிபுரம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 47 வயதான சீதாராமன் அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அரசுப் பேருந்து அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுகாம்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் முன் சக்கரம் அவரது தொடைகளில் ஏறி இறங்கி உள்ளது. இதில் சந்திரசேகர் படுகாயம் அடைந்தார். விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.