சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசார்!

0 549
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தாளக்குடி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தாளக்குடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளை மகன் 56 வயதான ரவிச்சந்திரன் என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து சீமன் பிராந்தி 40 பாட்டில்கள் மற்றும் மெக்லேன் பிராந்தி 26 பாட்டில்கள் என 66 பாட்டில்கள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரை பிடித்து விசாரித்த தனிப்படை போலீசார் ரவிச்சந்திரன் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.