வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதநகரில் வீட்டின் பூட்டை உடைத்து அரைபவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் 34 வயதான கார்த்திகேயன்.தற்போது மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 24 ம் தேதி மூன்று மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் 28 ம் தேதி காலை 8:30 மணி அளவில் தனது வீட்டிற்கு வந்தார் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அலமாரியில் இருந்த அரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.