சப்தரீஸ்வரர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா

0 450
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 28 ந்தேதி தொடங்கியது. 3 ம் நாளான நேற்று சுவாமி அம்பாள் அமர்ந்திருந்த அலங்காரத்தில் திருநடன காட்சிகளுடன் திருவீதிஉலா நடைபெற்றது.

திருத்தவத்துறை என அழைக்கப்படும் லால்குடி சப்தரீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 28 ந்தேதி தொடங்கியது. 3 ம் நாளான நேற்று காலையில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாள் அலங்காரத்தில்ஸ்ரீ சந்திரசேகர சுவாமி மண்டபத்தில் எழுந்தருளினார் இதனையடுத்து மகாதீபாதரனை நடைபெற்றது. இரவு அம்பாள் அலங்காரத்தில் திருநடன காட்சிகளுடன் திருவீதி உலா நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.