கார் மோதிய விபத்தில் முதியவர் பலி
சிறுகனூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம் ஜி எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான சுப்பையா. இவர் சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை நேற்று மதியம் 12 மணியளவில் கடக்க முயன்றார் அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சமயபுரம் சுங்கச்சாவடி பணியாளர்கள் சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.